உங்கள் கையில் இப்படி ரேகைகள் இருக்கிறதா? இதனை தெரிந்துகொள்ளுங்கள்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை
352Shares

பொதுவாக கைரேகை பலன் அறிய ஆண்களுக்கு வலது கை ரேகையையும் பெண்களுக்கு இடது கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

அவர்களின் கைககளில் உள்ள ரேகைகளை அடிப்படையாக வைத்து, எதிர்காலம், திருமண வாழ்க்கை, தொழில்முறை, குணநலன்கள் ஆகியவற்றை கணித்துவிடலாம் .

இதயரேகை

இதய ரேகையின் நீட்சி எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அறிய முடியும். நேராக செல்கிறதா? அந்த விரல் நோக்கி மேலோங்குகிறது? அல்லது கீழே வளைந்து செல்கிறதா? போன்றவற்றை முதலில் காண வேண்டும்.

ஜோதிட நிபுணர்கள் கூறுவதை வைத்து பார்க்கையில், இதய ரேகையின் நீளத்தை அவரது ஆயுள் குறித்து அறியலாமாம்.

மிக சிறிய இதய ரேகை கொண்டுள்ளவர்கள் கொஞ்சம் தன்னலமாகவும், மற்றவர் நலம் குறித்து யோசிக்காத நபர்களாகவும் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

ஒருவரது இதய ரேகை நீளமாக இருந்தால் அவர் எதையும் வெளிப்படையாக பேசிவிடுவார்கள். அவர்கள் மிகவும் நம்பகத்தன்மையுடன் நடந்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

சிலரது இதய ரேகையில் குறுக்கே, நெடுக்கே என கிளை ரேகைகள் இருக்கும். இதற்கு பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன.

கிளைகள்

இதய ரேகையில் இருந்து மேல்நோக்கி கிளை ரேகைகள் சென்றால் நல்லது. கீழ்நோக்கி சென்றால் திருமண வாழக்கை நீடித்திருக்காது, இதுவே இதய ரேகையில் பிரிவுகள், விரிசல்கள் இருந்தால் அவர்கள் காதலுக்காக என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்வார்கள்.

நடுவிரல்

நடுவிரல் உங்கள் இதய ரேகை நடுவிரல் நோக்கி இருப்பது போன்று இருந்தால் நீங்கள் லட்சியம் கொண்ட நபராக இருப்பீர்கள்.

உங்களிடம் நற்குணங்கள் அதிகமாக காணப்படும். மற்றவரை நீங்கள் கணிக்கும் முறை, நீங்கள் எடுக்கும் முடிவுகள் கச்சிதமாக இருக்கும். மற்றவரோடு இணைந்து பணியாற்றுவதில் சிறந்து விளங்குவீர்கள்.

மத்தியில்

நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு மத்தியில் இதயரேகை மேல்நோக்கி சென்றால், நீங்கள் மிகவும் மரியாதை செலுத்தும், அன்பு காட்டும், கனிவான, நம்பகமான நபராக இருப்பீர்கள்.

வெளிப்படையாக பேசும் மனம் கொண்டிருப்பீர்கள். அனைவரும் விரும்பும் நல்ல மனிதராக நீங்கள் திகழ்ந்தாலும், உங்கள் மீது அக்கறையும், பாதுகாப்பு உணர்வும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஆள்காட்டி விரல்

நம்பிக்கை தான் உங்கள் பலம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை மிகவும் நேசிக்கும் நபராக இருப்பீர்கள். ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு நாளையும் விரும்பி வாழும் மனிதராக திகழ்வீர்கள்.

தனியாக இருப்பினும் சரி, நண்பர்களுடன் இருப்பினும் சரி, உறவில் இருப்பினும் சரி நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருப்பீர்கள். உங்கள் மகிழ்ச்சி மற்றவர்களை சார்ந்து இருக்காமல், உங்களை சார்ந்தே இருக்கும்.

கீழ்நோக்கி செல்லுதல்

அமைதி, பொறுமை, அக்கறை, கனிவான இதயம் போன்றவை உங்களது நற்குணங்கள். மற்றவர்கள் உங்களுடன் நெருக்கமாக, அன்புடன், உண்மையாக பழக காரணியாக இருக்கும்.

தர்மம் செய்வது, மற்றவருக்கு உதவி செய்தல், தொண்டு காரியங்களில் ஈடுபடுதல், சமுதாய பணிகளில் உங்களை உட்படுத்திக் கொள்வதில் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்