22 கிலோ எடை குறைத்த பெண்: பாதை மாறிய பயணம்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை
812Shares

கேரளாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது உடல் எடையை 84 கிலோவில் இருந்து 62 கிலோவாக குறைத்துள்ளார்.

பொறியியல் பட்டதாரியான நீத்து என்ற பெண்மணி கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்தவர். திருமணம் செய்யும்போது மிக ஸ்லிம்மாக இருந்த இவர், திருமணத்திற்கு பின்னர் மகப்பேறு காலத்தில் எடை அதிகரித்துள்ளார்.

அதன்பின் குழந்தை பிறந்த பின்னர், குழந்தையுடன் நேரத்தை செலவிட்டதால், இவர் உடல் எடை குறித்து பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் குழந்தைக்கு 6 மாதகாலம் ஆனபின்னர், எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட ஆரபித்த இவர் 22 கிலோ எடை குறைத்துள்ளார்.

இவரது டயட் பிளான், மதியம் மட்டுமே அரிசி உணவு சாப்பிடுவேன். மைதா உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அறவே தவிர்த்துவிடுவேன். பசி எடுக்கும் நேரங்களில் காய்கறிகள் சாப்பிட்டு பசியாற்றுவேன். நொறுக்கு தீனிகளுக்கு முன்னுரிமை கிடையாது.

நடைபயிற்சி, நடனம் ஆடுவது, சைக்கில் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வேன். Pushups, squats, மற்றும் பிற உடல் சவாலான பயிற்சிகளை செய்வேன்.இவை அனைத்தையும் Youtube - இல் பார்த்து கற்றுக்கொண்டேன்.

இதனால் எனது உடல் எடை, 84 கிலோவில் இருந்து 62 கிலோவாக குறைந்தது.

மொத்தம் 22 கிலோ குறைத்தேன். இதனால் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக be slim, be fit' concept. என்ற உடற்பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன்.

மேலும், உடற்பயிற்சி தொடர்பான சில Course- களையும் படித்தேன். தற்போது, எனது உடல் எடையை குறைத்ததோடு மட்டுமல்லாமல் எனது தொழிலும் வேறு விதத்தில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்