இனிமேல் வியர்வை துர்நாற்றத்திற்கு குட்பை சொல்லலாம்

Report Print Printha in வாழ்க்கை முறை

வியர்வை சுரப்பிகள் வியர்வையை சுரக்கும் போது அவை கிருமிகளுடன் சேர்ந்து வெளியேறுவதால் துர்நாற்றம் உண்டாகிறது. இந்த வியர்வை நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்கள் இதோ,

வியர்வை துர்நாற்றத்தை போக்குவது எப்படி?

  • 1/2 கப் சோளமாவுடன் 1/2 கப் சமையல் சோடா, 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், விட்டமின் ஈ, தேயிலை மர எண்ணெய் போன்றவற்றை க்ரீம் போல கலந்து அதை குளித்தவுடன் வியர்வை வரும் பகுதிகளில் தடவி கொள்ள வேண்டும்.

  • கற்றாழையில் இருந்து ஜெல்லை பிரித்து எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய், பாதாம், ரோஜா அல்லது லாவெண்டர் எண்ணெய்யை கலந்து அதை அக்குளில் தடவ வேண்டும்.

  • எலுமிச்சை சாற்றில் சமையல் சோடா, நீர் அல்லது ரோஸ் வாட்டரை கலந்து அதை உடலில் தடவி 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.

  • 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஆகிய அனைத்தையும் நன்கு கலந்து பயன்படுத்த வேண்டும்.

  • 5 புதினா இலைகள், 5 ரோஸ்மெரி இலைகள், 1 கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து 10 நிமிடம் கழித்து அந்த நீரை வடிகட்டி ஒரு பஞ்சினால் நனைத்து வியர்வை நாற்றம் வரும் இடங்களில் தடவ வேண்டும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்