பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள் தெரியுமா?

Report Print Santhan in வாழ்க்கை முறை

ஒருவரை சந்திக்கும் போது நேரடியாக பார்க்கும் போது சட்டென நமக்கு தெரிவது அவரது முகம் தான். அதனாலேயே முகத்தினை பராமரிக்க பலரும் மெனக்கெடுகிறார்கள்.

முகத்தை சரியாக பராமரிக்காவிட்டால் நம் முகத்தில் பருக்கள் தோன்றுவதுண்டு, ஆனால் இவை சரியாக பராமரிக்காவிட்டால் மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தை எடுத்துச் சொல்பவையாகவும் இருக்கிறது.

நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள் எல்லாம் என்னென்ன என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

  • பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதால் இதனை தவிர்க்கலாம்.
  • தலையில் பொடுகு இருக்கிறது, அல்லது பொடுகு வருவதற்கான ஆரம்ப நிலை என்றால் கூட பருக்கள் தோன்றும். தலையில் உருவாகும் பாக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும்.
  • தலையை சரியாக பராமரிக்கவில்லை, அதிக வறட்சி அல்லது அல்லது எண்ணெய் இருந்தால் அவை நெற்றியில் பருக்களாக உருவாகிவிடும்.
  • ஏதாவது ஒரு பிரச்சனையை குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருந்தாலோ அல்லது பயம் ஏற்ப்பட்டாலோ நெற்றியில் பருக்கள் உண்டாகும்.
  • ஷாம்புவைத் தவிர தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சீரம், ஹேர் ஸ்ப்ரே போன்ற எந்தப் பொருட்கள் சேரவில்லை என்றாலும் நெற்றியில் பருக்கள் உண்டாகும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers