திருமண விழாவில் இதை கட்டாயம் பின்பற்றுங்கள்!

Report Print Printha in வாழ்க்கை முறை

திருமண விழா என்றால் மனமகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அதனால் நம் அனைவரும் அதில் மூழ்கி சிறப்பாக கொண்டாடுவோம் அல்லவா?

ஆனால் அப்படி உள்ள திருமண விழாவில் பின்பற்ற வேண்டிய முக்கியமான சில ஒழுக்க நெறிகளை தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

திருமண விழாவில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் என்ன?
  • ஒருவரின் திருமண விழாவில் கலந்துக் கொள்ளும் போது, அவர்களின் திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளை கெடுத்து, தொந்தரவு அளிக்காமல், அவர்களின் வேலையை சமநிலையுடன் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
  • திருமண விழாவில் அவர்கள் ஏற்பாடு செய்த நேரத்திற்கு மரியாதை அளித்து, உணவு வரும் வரை காத்திருப்பது நல்லது. அதற்கு மாறாக தேவையற்ற விஷயத்தில் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும்.
  • திருமண விழா நடத்துபவர்கள் சாப்பிடும் தட்டு கணக்கிற்கு கூட சில ஒப்பந்தம் வைத்திருப்பார்கள். எனவே சாப்பிடும் போது, பல தட்டுக்களை எடுத்து வீணாக்கி, அவர்களுக்கு செலவுகளை அதிகப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
  • திருமண விழாவில் கலந்துக் கொள்ளும் விருந்தாளிகள் சிறிய விஷயத்தை பெரிது படுத்தாமல், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
  • திருமண விழாவில் கலந்துக் கொள்பவர்களுக்கு என்று ஏற்பாடுகள் செய்திருப்பதை மனதார ஏற்றுக் கொண்டு அந்த திருமணத்தை ரசித்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
  • திருமண விழா முடியும் வரை இருந்து அவர்களிடம் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்த மறந்து விடாதீர்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments