ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம் பொங்கி வர இதை கட்டாயம் செய்யுங்கள்!

Report Print Printha in வாழ்க்கை முறை

வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளினை அடிப்படையாகக் கொண்டது என்பதை நீங்கள் அறிவீர்களா?

இந்த கோள்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதோடு நம்முடைய வாழ்வின் அதிர்ஷ்டத்தையும் தருகிறது.

அதற்கு ஒவ்வொரு கோளுக்கும் உரிய வண்ணத்தில் ஒவ்வொரு நாளும் உடைகளை அணிந்தால், அதற்கான பலனை பெற்று அந்நாளை சிறப்பாக்கலாம்.

திங்கள்

திங்கள் கிழமை வெள்ளை நிறத்துடன் தொடர்புடையது. அதுவும் திங்கள் சந்திரனைக் குறிக்கும் சொல் என்பதால் அதன் வெள்ளை நிறம் அனைத்திலும் சிறந்ததைக் குறிக்கிறது.

எனவே திங்கள் கிழமை வெள்ளை நிற உடைகளை அணிந்து, வெள்ளை நிறமுள்ள முத்து, வைரம் போன்ற நகைகளை போட்டுக் கொள்வது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

செவ்வாய்

செவ்வாய் சிவப்பு நிறங்களைக் குறிக்கும். எனவே செவ்வாய் கிழமை அன்று சிவப்பு வண்ண உடைகளையும், சிவப்புக்கல் அல்லது பவளம் ஆகிய நகைகளையும் அணிவது மிகவும் நல்லது.

புதன்

புதன் கிழமை பசுமையைக் குறிக்கும். புதன் கிழமையில் பச்சை நிறம் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே புதன் அன்று பச்சை நிற உடைகள், மரகதம் உள்ளிட்ட பச்சை நிறக் கற்கள் ஆகியவற்றை அணியலாம்.

வியாழன்

வியாழன் கிழமை மஞ்சள் நிறத்தைக் குறிக்கிறது. மஞ்சள் நகைகள் மற்றும் தங்க நிற உடைகளை அணிவது மங்களகரமாக இருக்கும்.

வெள்ளி

வெள்ளிக் கிழமை இளம்சிவப்பு (பிங்க்) நிறத்தை குறிக்கும். எனவே வெள்ளிக் கிழமைகளில் இளம்சிவப்பு நிறத்தை தேர்வு செய்து, பிங்க் நிறத்தில் உடைகள், மாணிக்கம் உள்ளிட்ட சிவப்பு நிறக்கற்களை கொண்ட நகைகள் ஆகியவற்றை அணிவது மிகவும் நல்லது.

சனி

சனிக்கிழமை அன்று கருப்பு நிறத்தில் உடை அணிவது சிறந்தது. அதேப் போல் அன்று நீலம், ஊதா மற்றும் வாடாமல்லி போன்ற நிறங்களையும் அணியலாம்.

ஞாயிறு

சூரியனுக்குரிய நிறம் தான் மஞ்சள். இது எதிரிகளை விலக்க வல்லது மற்றும் உடனடியாக பலன் தரக் கூடியதும். விஷம் உள்ளிட்ட ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கவல்லது.

எனவே ஞாயிற்றுக் கிழமை அன்று ஆரஞ்சு நிற உடைகள் மற்றும் நகைகளை அணிவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments