துணிகளில் கறையா? இருக்கவே இருக்கு சூப்பர் டெக்னிக்

Report Print Meenakshi in வாழ்க்கை முறை

நம் வெள்ளை உடைகளை காபி, சாக்லேட், சாயம் போன்ற கறைகள் பட்டுவிட்டால் அதை நீக்குவது மிகக் கடினம்.

ப்ளீச்சிங் பவுடர், எலுமிச்சை போன்று எதை உபயோகித்தாலும் அதை நீக்குவது கடினம்.

கறையினை போக்குவதற்கு ஆஸ்பிரின் மாத்திரைகளை உபயோகிக்கலாம்.

சில ஆஸ்பிரின் மாத்திரைகளை உடைத்து சுடுநீரில் போட வேண்டும். அதில் கறைகள் ஏற்பட்டுள்ள உடைகளை ஊறவைக்கவேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு நாள் இரவு முழுதும் ஊறவைக்கவேண்டும். பின்னர் அந்த உடைகளை துவைத்தால் அதிலுள்ள கறைகள் முழுதும் நீங்கி விடும்.

ஆஸ்பிரின் மாத்திரைகளில் உள்ள சாலிசைக்ளிக் அமிலமானது கறைகளுக்கு இடையே உள்ள பிணைப்பினை உடைப்பதால் கறைகள் எளிதாக நீக்கப்பட்டுவிடும். இந்த மாத்திரைகளை உபயோகிப்பதால் துணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments