வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வராமல் இருக்க.. இதை செய்யுங்கள்

Report Print Printha in வாழ்க்கை முறை

வெங்காயத்தை நறுக்கும் போது அனைவரின் கண்களிலுமே கண்ணீர் வரும், அதிலுள்ள நொதிகளே இதற்கு காரணம்.

எனவே கண்ணீர் சிந்தாமல் வெங்காயம் நறுக்குவதற்கு அற்புதமான டிப்ஸ் இதோ!

வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
  • வெங்காயத்தை நறுக்கும் போது கூர்மையான கத்தியைப் பயன்படுத்த வேண்டும். இதனால் வெங்காயத்திலிருந்து வெளிவரும் நொதியின் அளவு குறைந்து, கண்ணீர் வருவதை தடுக்கும்.
  • வெங்காயம் நறுக்கும் முன் அதனை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து வெட்டினால், நமக்கு கண்ணீர் வராது.
  • வெங்காயம் நறுக்கும் போது சூயிங் கம்மை வாயில் போட்டு சாப்பிட்டு கொண்டே நறுக்கினால் கண்ணீர் வருவதை தடுக்கலாம்.
  • வெங்காயத்தை நறுக்கும் பலகையில் சிறிது வினிகரை தேய்த்து விட்டு பின் வெட்டினால் கண்களில் இருந்து கண்ணீர் வராது.
  • வெங்காயம் வெட்டும் போது காற்றோட்டமாக உள்ள இடத்தில் வெட்டினால் காற்று நகரும் பக்கம் வெங்காயத்தில் உள்ள நொதிகள் நகரும். இதனால் வெங்காயம் நறுக்கும் போது கண்கள் கலங்காது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments