நேதாஜி- எமிலியின் காதல் வாழ்க்கை பற்றி அறியாத சில சுவாரசியம்!

Report Print Printha in வாழ்க்கை முறை

இந்திய சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய மாவீரர் சுபாஷ் சந்திர போஸ் கடந்த 1934ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டுக்குச் சென்ற போது, வியன்னாவில் எமிலி செனகல் என்ற பெண்ணைச் சந்தித்தார்.

எமிலியின் முதல் சந்திப்பிலேயே நேதாஜி அவர்மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. பின் நாட்களின் காதலர்களாக மாறிய எமிலியும் நேதாஜியும் ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் மாகாணத்தில் உள்ள பாட்கஸ்டீன் என்ற நகரில் 1937-ல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணம் முடிந்ததும் தனது ராணுவத்தை பலப்படுத்தி இந்திய விடுதலையை வென்றெடுக்கும் நோக்கத்தில் தொடர்ந்து பிற நாடுகளுக்குப் பயணம் செய்துக் கொண்டிருந்தார் நேதாஜி.

இந்தப் பயணங்களுக்கு நடுவில் 1934-ம் ஆண்டு முதல் 1942-ம் ஆண்டு வரை நேதாஜி 162 கடிதங்களை எமிலிக்கு எழுதியுள்ளார்.

எமிலிக்கு 1942ம் ஆண்டு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது, அவளுக்கு அனிதா என பெயர் சூட்டினார்கள்.

அனிதா பிறந்து இரண்டு மாதக் குழந்தையாக இருக்கும் போது, போராட்டக் களம் நோக்கிப் பிரிந்து போனார் நேதாஜி. எனவே தந்தை முகம் தெரியாமல் தாயின் அரவணைப்பில் அனிதா வளர்ந்து வந்தார்.

தன்னம்பிக்கை நீங்காத எமிலி அஞ்சல் துறையில் பணிபுரிந்து தனது அன்பு மகளைக் காப்பாற்றி கவனித்து வந்தார். பின் இவர் 1996ம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார்.

இந்நிலையில் தனது வாழ்வில் நடந்த சுவாரசிய காதல் கதை பற்றிய புத்தகத்தை நேதாஜி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments