மனிதர்களின் மனநிலை மாற்றத்தின்போது துணையாகும் செல்லப்பிராணிகள்

Report Print Givitharan Givitharan in வாழ்க்கை முறை

நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் நமக்கு சந்தோசத்தையும், ஆறுதலையும் தருவதுண்டு.

உடல் நிலை பாதிப்பின் போது இவ்வகை செல்லப்பிராணிகளி்ன் துணை மருத்தவ சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், இப் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அரிதாகவே உள்ளன.

தற்போது ஒரு புதிய ஆய்வொன்று, செல்லப்பிராணிகள் எவ்வாறு அவைகளின் சொந்தக்காரர்களுடைய மன நிலையை பாதிக்கின்றன என்பது தொடர்பாக ஆராய்ந்திருந்தது.

ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் கிட்டத்தட்ட மில்லியன் கணக்கானோர் மனநிலையால் பாதிக்கப்படுவதுண்டு. அதில் 1/5 பங்கானோர் இளம் வயதினர்.

இவர்களில் பெரும்பாலானோர் தனிமையை உணர்பவர்கள். சிலவேளைகளில் இவர்கள் முந்நைய சமூகத்தொடர்புகளிலிருந்து விலகியவர்களாகவும், மற்றையவர்களின் தொடர்புகளிலிருந்து விலகியவர்களாகவும் மாறுவதுண்டு.

மேற்கொள்ளப்பட்டிருந்த இவ் ஆய்வானது, மேற்படி நிலைமைகளில் செல்லப்பிராணிகள் எவ்வாறான பங்கு வகிக்கின்றன என்பதை முன்னிலைப்படுத்தியிருந்தது.

இதற்கென லண்டனைச் சேர்ந்த, சமூகம் தொடர்பான கவலை கொண்ட 54 பேரிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவர்கள் 18 வயதுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்கள் 20 - 90 நிமிட நேருக்கு நேரான நேர்காணல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களது தனிப்பட்ட வலைத்தளத்துள் மற்றைய உறுப்பினர்களின் முக்கியத்துவம் பற்றி வரிசைப்படுத்த கேட்கப்பட்டிருந்தனர்.

இதில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மருத்துவ தொழிலாளர்கள், பொழுதுபோக்குகள், இடங்கள், செயற்பாடுகள் மற்றும் பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இதில் 60 வீதமானோர் தமது செல்லப்பிராணிகளையே முன்னிலைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான விடயங்கள் BMC Psychiatry எனும் ஆய்வுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments