பூதம் கொடுத்த தங்கப்பரிசு!

Report Print Printha in வாழ்க்கை முறை

ஒரு ஊரில் பார்த்தசாரதி என்ற ஏழை மனிதன் வாழ்ந்து வந்தான் அவன் மிகவும் பேராசை கொண்டவனாக இருந்தான்.

ஒரு நாள் அவன் சரக்குகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்காக வெள்நாட்டிற்கு சென்றான்.

அப்போது ஒரு காட்டு வழியில் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் தாகம் எடுத்தது அருகில் சுற்றும் முற்றும் தேடியதில் கிணறு ஒன்று தென்பட்டது.

அந்த கிணற்றுக்கு சென்று தண்ணீர் எடுத்தான். அப்போது யார் இங்கே தண்ணீர் எடுப்பது என்று ஒரு சத்தம் கேட்டது

உடனே பயத்தில் அவன் நடுங்கிய குரலில் ஐயா நான் ஒரு ஏழை தண்ணீர் குடிப்பதற்காக வந்தேன் என்று கூறினான்.

பின் அவன் நீங்கள் யார் என்று கேட்டான் நான் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் மந்திரக் கிணறு இந்த கிணறை பாதுகாக்கும் பூதம், நான் யாருடைய கண்களுக்கும் தெரியமாட்டேன் என்று அந்த பூதம் பேசியது.

மேலும் அந்த பூதமானது, உன்னிடம் பொற்காசுகள் இருந்தால் இந்த கிணற்றுக்குள் போட்டு உன் ஆசைகளை கேள் ஆனால் இரண்டு முறை மட்டுமே உன் விருப்பங்கள் நிறைவேற்றுவேன் என்று கூறியது.

பின் அவனும் பேராசையால், ஒரு பொற்காசுகளை போட்டு எனக்கு விலை உயர்ந்த பொற்கசுகளும், நகைகளும் என் வண்டி முழுவதும் நிரம்ப வேண்டும் என்று கேட்டான்.

அதே போல் அவன் வண்டியில் தங்க நகைகள் பொங்கி வழிந்தது.

பின் யோசித்தான் இந்த நகைகளை காட்டு வழியில் கொண்டு சென்றால் திருடர்கள் பறித்து விடுவார்கள் என்று தன்னுடைய அறிவுக் கூர்மையை அவனே பாராட்டிக் கொண்டு இன்னொரு பொற்காதுகளை போட்டு இந்த நகைகள் அனைத்தும் எனது கண்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும். என்று கேட்டான் அப்படியே நடந்தது.

பின் இந்த உலகிலேயே நான் தான் பணக்காரன் என்று நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்று தன் மனைவியிடம் தங்க நகைகளை நம் வண்டியில் எவ்வளவு உள்ளது பார் என்று கூறினான்.

அவளோ எங்கு உள்ளது ஒன்றும் இல்லை என்று சொன்னாள்.

அவனுக்கும் அப்போது தான் நினைவுக்கு வந்தது தன்னுடைய இரண்டாவது ஆசையாக அந்த பூதத்திடன் கேட்டது. “பேராசை பெருநஷ்டம்”

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments