காதல் ஒரு போதை மாத்திரையா? ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மை

Report Print Abhimanyu in வாழ்க்கை முறை

காதல் இந்த ஒற்றை வார்த்தை கொண்டிருக்கும் சக்தி அனைவரும் அறிந்ததே..

கொஞ்சம் பொறுங்கள் யாரும் திட்டவேண்டாம். நான் இங்கு காதலின் அருமை பெருமையெல்லாம் பற்றி பார்க்க போகும் ஓர் பதிவாக இதனை எழுதவில்லை.

காதலின் பின்னால் காணப்படும் அறிவியல் சார்ந்த விடயங்களை பற்றிதான் ஆராயவுள்ளோம்.

ஆரம்பத்தில் காதல் எனும் உணர்வு எங்கே உருவாகின்றது? என்ற கேள்விக்கு இதயம் என்பதே அனைவரினதும் பதிலாக அமையும்.

ஆனால் இது நமது மூளையில்தான் உருவாகின்றது. என கூறினால் நம்பமுடிகின்றதா?

ஆம் இதுவே உண்மை நமது மூளைதான் இச்செயற்பாட்டை நிகழ்த்துகின்றது.

இதில் ஆச்சர்யபடவேண்டிய விடயம் என்னவென்றால் போதைபொருளான “கொக்கெய்னை”யினை ஒருவர் உபயோகப்படுத்தும் போது அவரின் மூளை எவ்வாறான விதத்தில் செயற்படுகின்றதோ அவ்வாறுதான் காதலிப்பவர்களின் மூளையும் காணப்படுமாம்.

கொக்கெய்னை உபயோகப்படுத்தும் போது நமது மூளையில் காணப்படும் மகிழ்ச்சிமையமானது இலகுவில் தாக்கமடைகின்றது. இதன்பொருட்டு நாம் ஒருவித மகிழ்ச்சி நிலையை அடைகின்றோம். இதே போன்றுதான் காதலர்களும் மிக இலகுவில் மகிழ்ச்சி நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

மேலும் இதில் காணப்படும் மற்றுமொரு விஷேடம் என்னவென்றால் காதலர்கள் தமது காதலன் அல்லது காதலியை மட்டுமே விரும்பிக் கொண்டு இருக்கமாட்டார்கள், தம்மை சுற்றிக்காணப்படும் அனைத்தையுமே நேசித்து கொண்டுதான் இருப்பார்கள்.

மேலும் இக்காதல் உணர்வினால் மகிழ்ச்சிமையம் தூண்டப்படும் போது பயம், வெறுப்பு என்பன குறைந்து கவலைகள் பறந்து போய்விடும் உதாரணத்திற்கு இந்த மகிழ்ச்சிமையத்தை நாம் படிக்கும் போது தூண்டினால் கல்வி நடவடிக்கைகளிலும் சிறப்பாக செயற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம்.

அத்துடன் நமது மூளையில் காணப்படும் dopamine,nerepinephrine,oxytocin எனும் மூன்று இரசாயண திரவங்களும் தான் இக்காதல் உணர்வினை பிரதானமாக தூண்டுகின்றது. இதெல்லாம் போக காதலின் போது தம்மால் எதுவும் முடியும் என நினைக்க வைப்பதும் அவ்வாறானதொரு மன நிலையினைத் தூண்டுவதற்கும் காரணமாக அமைபவையும் இந்த இரசாயண திரவங்களே.

எளிமையாக கூறப்போனால் காதல் ஒரு போதைமாத்திரை, காதலை நாம் காதலிக்கின்றோம். இப்பதிவை முடிப்பதற்கான நேரமும் சரி என எண்ணுகின்றேன்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments