பொத்தான்களை கொண்ட கைப்பேசிகள் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தன.
அதன் பின்னர் தொடுதிரை தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதில் ஒருபடி மேலாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இவற்றிற்கு அடுத்ததாக சுருட்டி வைத்திருக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இதற்கான முயற்சியில் சாம்சுங் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக் கைப்பேசி விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை Oppo நிறுவனம் அடுத்த வருடம் Oppo X எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை சுருட்டக்கூடிய வகையில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கணவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.