Google Meet அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்!

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
11Shares

உலகளாவிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட லொக்டவுன் நிலைமையால் வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷன்களுக்கான மவுசு வெகுவாக அதிகரித்தமை தெரிந்ததே.

இவற்றில் முன்னணியில் இருப்பது Zoom ஆகும்.

இது தவிர மைக்ரோசொப்ட் டீம்ஸ் மற்றும் கூகுள் மீட் என்பனவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கூகுள் மீட் அப்பிளிக்கேஷனில் Raise Your Hand வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குழுநிலை மீட்டிங்கில் இருக்கும்போது மாயையாக (Virtual) தமது கையை உயர்த்தி சந்தேகங்களை தீர்ப்பதற்கோ அல்லது கருத்து தெரிவிப்பதற்கோ இவ் வசதியினை பயனர்கள் பயன்படுத்த முடியும்.

இவ் வசதியானது Zoom அப்பிளிக்கேஷனில் ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்