முதன் முறையாக கூடிய பிரதான நினைவகத்துடன் அறிமுகமாகும் iPad Air

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
185Shares

ஏனைய மொபைல் சாதன உற்பத்தி நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் டேப்லட் போன்று ஆப்பிள் நிறுவனம் iPad சாதனத்தினை அறிமுகம் செய்து வருகின்றது.

இப்படியான நிலையில் இவ் வருடம் மற்றுமொரு புதிய iPad Air சாதனத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதில் வழமைக்கு மாறாக அதிகூடிய பிரதான நினைவகம் தரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி 4GB RAM இணைக்கப்பட்டுள்ளது.

தவிர Apple A14 Bionic processor, 64GB மற்றும் 256GB சேமிப்பு நினைவகம் என்பனவும் இதில் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இச் சாதனம் எப்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்