விரைவில் அறிமுகமாகின்றது OnePlus 8T ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

OnePlus 8T எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியுள்ளது.

65W அதிவேக சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இக் கைப்பேசியில் 4500 mAh மின்கலம் தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

தவிர 6.55 அங்குல அளவுடைய AMOLED திரையினை கொண்டு இக் கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் Snapdragon 865+ processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இவற்றுடன் 48 மெகாபிக்சல்கள், 16 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய 4 பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியானது எதிர்வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்