Motorola நிறுவனம் அறிமுகம் செய்யும் அட்டகாசமான ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

முன்னணி இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Motorola ஆனது Moto G9 Play எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி குறித்த கைப்பேசியானது 6.5 அங்குல அளவு, 1600 x 720 Pixel Resolution உடைய IPS LCD திரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Snapdragon 662 mobile processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இதன் சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 512GB அதிகரிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் 8 மெகாபிக்சல்களை உயைட செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், உட்பட தலா 2 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என 3 பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது 159 பவுண்ட்டுகள் ஆகும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்