அமெரிக்காவில் அறிமுகமாகும் சாம்சுங்கின் புதிய 5G கைப்பேசி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
140Shares

சாம்சுங் நிறுவனமானது அண்மையில் தனது புத்தம் புதிய Galaxy A71 ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசியில் 4G வலையமைப்பு மற்றும் 5G வலையமைப்பு என்பவற்றினை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவில் Galaxy A71 5G கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக் கைப்பேசியானது 6.7 அங்குல அளவு, 1080x2400 Pixel Resolution உடைய Super AMOLED தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Snapdragon 730 mobile processor, பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB RAM, 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 64 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்கள், இரு 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா என மொத்தமாக நான்கு பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்