மொஸில்லா நிறுவனம் அறிமுகம் செய்யும் Picture-in-picture வசதி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

மொஸில்லா நிறுவனமானது தனது பையர்பாக்ஸ் உலாவில் Picture-in-picture எனும் புதிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் வசதியானது வீடியோ தளங்களை பார்வையிடுவதற்கு இலகுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது வீடியோ ஒன்றினை பார்வையிட்டுக்கொண்டே வேறொரு டேப்பில் (Tab) மற்றைய இணையத்தளங்களை பார்வையிடக்கூடியதாக இருக்கும்.

இதற்காக சிறிய விண்டோவில் குறித்த வீடியோக்கள் அனைத்து புதிய டேப்புக்ளிலும் செயற்பட்டுக்கொண்டே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் கணினிகளுக்கான பையர்பாக்ஸ் உலாவியில் இவ் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டள்ளது.

எனினும் லினக்ஸ், மேக் ஓஎஸ் போன்றவற்றில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இவ் வசதியினை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்