பேஸ்புக் திரைப்பட விளம்பரத்தில் புதிய வசதி அறிமுகம்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை அளித்து வருகின்றது.

இவற்றில் திரைப்படங்களுக்கான விளம்பரங்களும் ஒன்றாகும்.

இச் சேவையில் தற்போது புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்ய முன்வந்துள்ளது பேஸ்புக்.

இதன்படி திரைப்படங்களுக்கான டிக்கெட் மற்றும் காட்சி நேரங்களையும் காண்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பயனர்கள் தமது காட்சி நேரம் மற்றும் டிக்கெட் என்பவற்றினை பேஸ்புக் ஊடாக முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

எவ்வாறெனினும் இவ் வசதியானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்