முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனம் முதன் முறையாக Galaxy Fold எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.
இக் கைப்பேசியானது கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அறிமுகமாகியிருக்க வேண்டும்.
எனினும் அதன் திரையில் காணப்பட்ட குறைபாடு காரணமாக தாமதமாகியது.
தற்போது குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படும் எனவும் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அறிமுகம் செய்யப்படும் திகதி வெளியிடப்படவில்லை.
இதேவேளை இக் கைப்பேசியின் விலையானது 1,980 டொலர்கள் வரை இருக்கும் என சாம்சுங் நிறுவனமே உறுதிப்படுத்தியுள்ளது.
Samsung#GalaxyFold ready for launch starting from September. Find out more: https://t.co/9eIVHLeyHy pic.twitter.com/kDW8DnpE42
— Samsung US Newsroom (@SamsungNewsUS) July 25, 2019