பல்வேறு மொபைல் அப்பிளிக்கேஷன்களில் Lite எனப்படும் பதிப்பும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் வகை பதிப்புக்கள் குறைந்த கோப்பு அளவினை உடையதாக இருப்பதுடன், மந்தமான இணைய இணைப்பிலும் மிகவும் வேகமாக செயற்படக்கூடியவை.
இதேபோன்ற Lite பதிப்பு ஒன்று Spotify அப்பிளிக்கேஷனுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இப் பதிப்பானது முதலில் அன்ரோயிட் சாதனங்களுக்காக மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது.
இது 10MB கோப்பு அளவு உடையதாக காணப்படுகின்றது.
இதன் பிரதான அப்பிளிக்கேஷன் 100MB கோப்பு அளவுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப் புதிய பதிப்பினை ஆசியா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்க போன்ற நாடுகளில் உள்ளவர்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.