இரு புதிய வசதிகளுடன் அறிமுகமாகும் வாட்ஸ் ஆப்பின் புதிய பதிப்பு

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

அன்ரோயிட் சாதனங்களுக்காக வாட்ஸ் ஆப்பின் புதிய பதிப்பு ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

2.19.106 பீட்டா பதிப்பாக வெளியிடப்படவுள்ளது.

இப் பதிப்பில் இரு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன்படி வாட்ஸ் ஆப் டூடுலுக்கான புதிய பயனர் இடைமுகம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மற்றையது ஸ்கிரீன் ஷாட் கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதாவது இருவர் சட் செய்யும்போது ஒருவருக்கொருவர் மற்றையவர்களது குறுஞ்செய்திகளை ஸ்கிரீன் ஷாட் செய்வதில் கட்டுப்பாடு கொண்டுவரப்படுகின்றது.

எனினும் இவ் வசதியினைப் பெறுவதற்கு Fingerprint Lock செயற்படு நிலையில் காணப்பட வேண்டும்.

சட் செய்பவர்களில் ஒருவர் தனது கைப்பேசியின் ஸ்கிரீனை லாக் செய்துள்ள சந்தர்ப்பத்தில் மற்றையவர் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது.

ஸ்கிரீன் லாக் செய்யாத சந்தர்ப்பத்தில் மாத்திரமே ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும்.

எனவே ஒருவரது அந்தரங்க விடயங்களை பாதுகாக்க இவ் வசதி பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers