புதிய பாதுகாப்பு அளவீடுகளை அறிமுகம் செய்தது TikTok

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

சீனாவின் மிகப்பெரிய சமூக வீடியோ அப்பிளிக்கேஷனாக TikTok காணப்படுகின்றது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது உலகளவில் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளது.

எனினும் இதன் மூலம் பல்வேறு எல்லை மீறல்களும் இடம்பெற்று வருகின்றன.

இதனால் TikTok அப்பிளிக்கேஷன் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.

இப்படியான நிலையில் பாதுகாப்பு அளவீடுகளை அறிமுகம் செய்து அதன் ஊடாக பெறப்படும் தகவல்களைக் கொண்டு பாதுகாப்பான முறையில் பயனர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இப் பாதுகாப்பு அளவீடுகள் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது அதிக எண்ணிக்கையான பயனர்களைக் கொண்ட இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக குறித்த அப்பிளிக்கேஷனில் பாதுகாப்பு கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு தொடர்பான டூல்கள் மற்றும் கல்வித்துறையை பாதுகாப்பதற்கான வளங்கள் என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers