விண்டோஸ் 10 இயங்குதளத்தில் டார்க் தீம் நீங்கள் ஆக்டிவேட் செய்வது எப்படி..?

Report Print Abisha in அறிமுகம்

விண்டோஸ் 10 இயங்குதளம் மூலம் Microsoft நிறுவனம் தனது இயங்குதளத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது.

இதில், இன்டர்ஃபேசை டார்க்மோடில் தோன்றவைக்க பயனர்கள் பிளாக் தீம் பயன்படுத்த வேண்டிய நிலை நிலவுகிறது.

சமீபத்திய அப்டேட் மூலம் Microsoft நிறுவனம் டார்க் மோட் ஆப்ஷனை செட்டிங்களில் வழங்கியிருக்கிறது. இதன்மூலம் முழு யூசர் இன்டர்ஃபேசையும் இருளாக மாறிவிடும்.

இதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும் அதற்கான பதில் தான் கீழே விளக்கப்பட்டுள்ளது.

தேவையானவை:

  • விண்டோஸ் 10 இயங்குதளத்தை டவுன்லோடு செய்து தொடர்ந்து இன்ஸ்டால்செய்யவும்.
  • விண்டோஸ் 10 இயங்குதளத்தின் புதிய பதிப்பை டவுன்லோடு செய்ய, ஸ்டார்ட்ஆப்சனை தேர்வு செய்து மெனு சென்று செட்டிங் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • இனி அப்டேட் மற்றும் செக்யூரிட்டி ஆப்ஷனில் விண்டோஸ் அப்டேட் ஆப்ஷனைக்ளிக் செய்யவும்.
  • தொடர்ந்து check now பட்டனை click செய்தால் அப்டேட் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் ஆகும்.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவை

  1. windows 10 சாதனத்தின்setting ஆப்ஷனை click செய்யவும் - ஸ்டார்ட் மெனுவில் கியர் ஐகானை க்ளிக் செய்து செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  2. personalization - இனிபெர்சனலைசேஷன் ஆப்ஷன் சென்று வால்பேப்பர், தீம்ஸ் மற்றும் கலர்ஸ் தொடர்பானசெட்டிங்களை மாற்றவும்
  3. color option -இடதுபுறம் இருக்கும் கலர்ஸ் ஆப்ஷனை click செய்து யூசர் இன்டர்ஃபேஸ் ஆப்ஷனை click செய்யவும்.
  4. இனி கீழ்புறமாக ஸ்வைப்செய்து 'Choose your default app mode ஆப்ஷனை click செய்ய வேண்டும்.
  5. இனி டார்க் ஆப்ஷனை clickசெய்ய வேண்டும்.
  6. இவ்வாறு செய்ததும்,ஒட்டுமொத்த யூடர் இன்டர்ஃபேசும் தானாக டார்க் மோடிற்கு மாறிவிடும்

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்