வயர்லெஸ் சார்ஜிங் உடன் கூடிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2: வெளியீட்டு விபரம்

Report Print Kabilan in அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் இயர்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் வரும் 25ஆம் திகதி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருவதாகவும், இந்நிகழ்ச்சியில் தனது சேவை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்நிகழ்ச்சியில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2 சாதனம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய ஏர்பாட்ஸ் மார்ச் 29யில் விற்பனைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய ஏர்பாட்ஸ் 2 சாதனத்தில் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ், சிரி இண்ட்கிரேஷன் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் 2 அறிமுகமானதும் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட மற்றொரு மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இது 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகமாகும் என தெரிகிறது. தற்போது ஐபோன் பயன்படுத்துவோரில் சுமார் 5 சதவிகிதத்திற்கும் குறைவானோர் ஏர்பாட்ஸ் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மார்ச் 28ஆம் திகதி தற்சமயம் சந்தைகளில் கிடைக்கும் ஏர்பாட்ஸ் 2 விற்பனை நிறுத்தப்படும் என்றும், இதன்மூலம் ஏர்பாட்ஸ் 2 விற்பனையை ஊக்குவிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers