அடுத்த மாதம் அறிமுகமாகும் ஆப்பிளின் மற்றும் ஒரு ஒன்லைன் சேவை

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் Apple TV எனும் ஒன்லையின் சேவையினை அறிமுகம் செய்வது தொடர்பில் கடந்த சில வருடங்களாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

இந்நிலையில் தற்போது இதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது.

அதாவது அடுத்த மாதமளவில் Apple TV சேவையை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் Netflix மற்றும் Amazon Prime போன்றவற்றிற்கு போட்டியாக களமிறங்கவுள்ளது.

எனினும் இச் சேவையைப் பெறுவதற்கான சந்தா கட்டணங்கள் தொடர்பிலான விபரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் விரைவில் தெரியப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers