ஈயின் முதுகில் ரோபோவை பொருத்திய மாணவன் - எதற்காக ..?

Report Print Gokulan Gokulan in அறிமுகம்

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தில் கணினி அறிவியல் படித்துவரும் இந்திய மாணவர் விக்ரம், ஈயின் முதுகில் ரோபோ ஒன்றை பொருத்தி சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

இந்திய மாணவரான விக்ரம் இது குறித்து மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உருவாக்கி உள்ள ரோபோவின் அமைப்பு, மொத்தமாக 102 மில்லி கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

இதனுடன் ஒரு சிறிய பை போன்ற அமைப்பு உள்ளது. அதனுள் சிறிய சர்கியூட் போர்ட் அமைந்திருக்கும். மேலும் அதில் ஒரு சிறிய வகை ஆண்டனா, பேட்டரி, ஜி.பி.எஸ் கருவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

பயன்பாடு குறித்து விக்ரம் கூறியதாவது, இந்த கண்டுபிடிப்பின் அம்சமாக ஈகள் தாவரத்தின் மேல் அமரும் போது தாவரத்தின் வளர்ச்சி, வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் காரணிகள், அந்த பகுதியில் நிலவி வரும் தட்ப வெப்ப நிலை போன்றவை குறித்து ஆராய உதவும். மேலும் அந்த ரோபோ செயல்படும் இடத்தில் வானிலை குறித்தும் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் குறைகள் குறித்து கூறுகையில், தேனியிடம் இது பேன்ற ரோபோக்கள் அமைத்தாலும் அவற்றை திரும்ப மீட்பது மிகவும் கடினமாக உள்ளது.

ஏனெனில் ஈக்கள் எங்கு செல்லும் என்று அறிவது மிகவும் கடினம். மேலும் சில வேளையில் சிக்னல் கிடைக்கவில்லை என்றால் அவையின் பணிகள் தேவையற்றதாகி விடுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers