குறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Reliance Jio

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

முகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக தொழில்நுட்ப புரட்சியினை மேற்கொண்டு வருகின்றது.

இதன் மற்றுமொரு அங்கமாக குறைந்த விலையில் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக Economic Times சுட்டிக்காட்டியுள்ளது.

இக் கைப்பேசி வடிவமைப்பிற்காக Reliance Jio Infocomm ஆனது அமெரிக்காவின் Flex நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளது.

Flex நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்று ஏற்கணவே சென்னையில் காணப்படுகின்ற நிலையில் இணைந்து பணியாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு உருவாக்கப்படும் கைப்பேசிகள் அனைத்தும் 4G இணைய தொழில்நுட்பத்தினை கொண்டதாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers