குவால்காமின் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அறிமுகம்

Report Print Kabilan in அறிமுகம்
35Shares

பிரபல செயலி தயாரிப்பு நிறுவனமான குவால்காம், சர்வதேச சந்தையில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் என்னும் புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.

ஹூவாயில் நடைபெற்ற ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் குவால்கம் இந்த தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனுடன், கைப்பேசி மற்றும் கணினி தொழில்நுட்பங்களில் குவால்கம் செய்து வரும் மேம்படுத்தல்கள் சார்ந்த அறிவிப்புகளையும் குவால்கம் வெளியிட்டது.

இந்த ஸ்னாப்டிராகன் 845, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்டின் மேம்படுத்தப்பட்ட செயலி ஆகும். மேலும், இது மேம்படுத்தப்பட்ட செயல்திறன், சிறப்பான திறன் பயன்பாடு மற்றும் இமேஜ் பிராசஸிங் திறன்களை கொண்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் வெளியாக உள்ள உயர்-ரக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில், ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஜியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்பட உள்ளதாக, ஜியோமியின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்