செல்ஃபி கமெராவில் மாபெரும் புரட்சியுடன் அறிமுகமாகும் Vivo V7

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் Vivo நிறுவனம் குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

இதற்கு காரணம் ஏனைய முன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுக்கு போட்டியான தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்கின்றமை ஆகும்.

இந் நிறுவனம் தற்போது Vivo V7 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது.

இக் கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 1440 x 720 Pixel Resolution உடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 450 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

மேலும் வமைக்கு மாறான முறையில் 24 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெராவினை கொண்டுள்ளதுடன் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 3000 mAh மின்கலம் என்பனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இரட்டை சிம் வசதி மற்றும் இரு நிறங்களில் அறிமுகமாகும் இக் கைப்பேசியின் விலையானது 300 டொலர்கள் ஆகும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...