ஸ்மார்ட் கமெராவுடன் அறிமுகமாகும் iPhone 8

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
205Shares

விரைவில் அறிமுகமாகவுள்ள iPhone 8 கைப்பேசிகளில் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

கமெராவில் கூட சில புதிய நுட்பங்கள் தரப்பட்டுள்ளதாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் ஸ்மார்ட் கமெரா தொழில்நுட்பம் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படுகின்றது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள டுவல் ரியர் கமெராவானது உங்கள் செல்லப் பிராணிகள், குழந்தைகள் மற்றும் விரும்பிய காட்சிகள் உட்பட பல அம்சங்களை தானாகவே அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான SmartCam தொழில்நுட்பமானது iOS 11 இயங்குதளத்தில் காணப்படுகின்றது.

தற்போதுள்ள அப்பிளிக்கேஷன் ஆனது சில வகையான பொருட்களை மட்டும் தானாக அறிந்துகொள்ளக்கூடியதாக (Detect) இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்