குழந்தைக்கு பால் பாட்டில் ஆரோக்கியமானதா? ஆபத்தானதா?

Report Print Kavitha in குழந்தைகள்

இன்று காலக்கட்டத்தில் பிறந்த சில குழந்தைகளுக்கு 5 மாதங்கள் ஆகும் போதே தாய்ப்பால் பற்றாக்குறை பிரச்சனை வந்து விடுகிறது.

அதனால் சில தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை படி பவுடர் பால் அல்லது பசும்பாலை பாட்டிலில் ஊற்றி குழந்தைக்கு கொடுப்பதுண்டு.

ஆரம்ப கட்டத்தில் நிப்பிள் பொருத்திய ஃபீடிங் பாட்டில் கள் அம்மாவிடம் பால் குடிப்பதை போன்ற உணர்வை தரும் என்று பழக்கி அதை தொடர்ந்து குழந்தைக்கு பால், தண்ணீர் எல்லாமே ஃபீடிங் பாட்டிலில் கொடுத்தார்கள்.

ஆனால் ஃபீடிங் பாட்டிலில் நிப்பிளானது கண்ணுக்கு தெரியாத அழுக்குகளை கொண்டிருக்கும் என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதிலும் சில அம்மாக்கள் ஃபீடிங் பாட்டிலை குடிக்கும் குழந்தைகள் எந்த தொல்லையும் இல்லாமல் குழந்தை அழாமல் இருக்க நிப்பிளை வாயில் வைத்துவிடுவார்கள். இவை நிச்சயம் குழந்தையின் வளர்ச்சிக்கு நன்மை தராது.

அதுமட்டுமின்றி ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுப்பதனால் பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது என கூறப்படுகின்றது.

அந்தவகையில் ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுப்பதால் ஏற்படும் ஆபத்து பற்றியும், அதனை தடுக்க என்ன செய்யலாம் எனவும் இங்கு பார்ப்போம்.

எவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தும்?
 • அம்மாவிடம் பால் கொடுக்கும் குழந்தை நாக்கை நீட்டியபடி வாயை திறந்தபடி நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு பாலை உறிஞ்சி குடிக்கும். ஆனால் ஃபீடிங் பாட்டிலில் குழந்தையின் வாய் குவிந்திருக்கும். நாக்கு மடங்கி இருப்பதால் குழந்தை இயல்பாக உறிஞ்சி குடிக்க முடியாது.
 • நாம் ஏற்னவே போட்டிருக்கும் ஓட்டையில் அளவால் அவை எளிதாக குழந்தையின் வாய்க்குள் செல்வதால் குழந்தை பாலை அப்படியே விழுங்க தொடங்கும். மூச்சு விடவும் நேரமின்றி அப்படியே விழுங்கி விடும். இதனோடு வாய் வழியாக காற்று உள்ளே செல்வதற்கும் வாய்ப்பு உண்டு. இதனாலும் குழந்தைக்கு வயிறு உப்புசம், வயிறு வலி உண்டாகலாம்.
 • ஃபீடிங் பாட்டிலில் பயன் படுத்தப்படும் ரப்பர் சிலிக்கோன், பிளாஸ்டிக், லேட்டக்ஸ் போன்றவற்றால் செய்யப்படுகிறது. இதுவும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
​ஃபீடிங் பாட்டில் பயன்படுத்தும் போது செய்ய வேண்டியவை என்ன?
 • குழந்தைக்கு பால் கொடுக்கும் போது 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து வாயில் வைக்க அனுமதிக்க வேண்டாம்.
 • பால் குடித்த பிறகு வெறும் பாட்டிலை வாயில் வைத்து சப்பிக்கொண்டிருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும்.
 • பால் குடித்து முடித்தவுடன் பாட்டிலை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
 • அதிகப்படியான சோப்பு பயன்படுத்தி பாட்டிலை கழுவ வேண்டாம்.
 • பாட்டில் மூடியில் ரப்பர், ரிங் என்று அனைத்தையும் வெளியே எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
 • தினமும் காலையும் மாலையும் பாட்டிலை மிதமான சூட்டில் இருக்கும் வெந்நீரில் கழுவி எடுக்க வேண்டும்.
 • பாட்டில் நிப்பிளை மாதத்துக்கு இரு முறை மாற்றிவிட வேண்டும். பிளாஸ்டிக் அல்லாத ஸ்டீல் பாட்டில் பயன்படுத்துவது நல்லது.
​வேறு என்ன செய்யலாம்?
 • குழந்தைக்கு 10 மாதமாகும் போதே நாள் ஒன்றுக்கு 4 முறை கொடுக்கும் பாட்டில் பாலை இரண்டு முறையாக குறைக்க வேண்டும்.
 • பாட்டிலை படிப் படியாக குறைத்து டீஸ்பூன் பழகலாம். பிறகு சாதாரண ஸ்ட்ரா தம்ளரை தம்ளரில் கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி கொடுக்கலாம்.
 • தண்ணீரை எந்த காரணம் கொண்டும் பாட்டிலில் ஊற்றி பழக்கமால் குழந்தையின் பக்கத்தில் உட்கார்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கொடுப்பது நல்லது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்