குழந்தைகளுக்கு டயபர் ஏற்படுத்தும் ஆபத்து என்னென்ன தெரியுமா?

Report Print Kavitha in குழந்தைகள்

இன்றைக்கு எல்லா சிறுகுழந்தைகளும் டயபர் பயன்படுத்துவது எல்லா நாடுகளில் பரவலாக காணப்படுகின்றது.

பெற்றோர்களை பொறுத்தவரை டயபரினை அணிவிப்பதே சுத்தம் மற்றும் ஆரோக்கியம் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மை தவறு

இதற்காக பெற்றோர்கள் அதிக அளவில் பணம் செலவிட்டு குழந்தைகளுக்கு வாங்கி உபயோகிக்கிறார்கள்.

உண்மையில் டயப்பர்கள் பயன்படுத்துவதனால் குழந்தைக்கு பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றது எனப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது டயப்பர்களை உபயோகப்படுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • ஈரமான டயபரை கவனிக்காமல் அதிக நேரம் விட்டுவிட்டால், குழந்தைகளுக்கு பாக்டீரியா தொற்று, தடிப்புகள் மற்றும் புண் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
  • குழந்தையின் மென்மையான உடலில் டயபரை உபயோகிப்பது அவர்களின் சருமத்திற்கு ஏற்றதல்ல.
  • டயபரில் ஈரத்தை உறிஞ்சுவதற்கென இரசாயனங்கள், ஜெல்கள் மற்றும் சில வேதிப்பொருட்களை கலப்பதால் அவை குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.
  • டயபர்கள் சோடியம் பாலியாகிரிலேட் பயன்படுத்தி செய்யப்படுகிறது. மேலும் இதில் நச்சு தன்மை கொண்ட உறிபஞ்சுகள் இருப்பதால், குழந்தைகளுக்கு சில வகையான தொற்று நோய் ஏற்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைகிறது.
  • குழந்தைகள் டயபரை ஈரம் செய்யும் போது, அதிலிருக்கும் மூலக்கூறுகள் ஈரப்பதத்தை வெளி விடாமல் தடுக்கும். இதனால், டயபர் வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும், அந்த சமயத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்றவை எளிதில் பரவி, குழந்தைகளின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
  • டயபரில் இருந்து அதிக அழுத்தத்தில் ஆவியாக கூடிய இரசாயங்களான எத்தில் பென்சீன், சொலின், தைலின் போன்றவை இருப்பதால் குழந்தைகளுக்கு நரம்பியல் பிரச்னைகள் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்படும்.
  • டயபர்களில் பிளாஸ்டிக், பேப்பர் மற்றும் பேஸிஸ் போன்றவை இருப்பதால், இவை எளிதில் மாக்குவதில்லை. இவை சுற்று சூழலை பாதிக்க கூடியவை. இதனால் பெரியவர்களையும் இவை பாதிக்கின்றன.
  • டயபர்கள் உபயோகிப்பதால் குழந்தைகளின் கண், மூக்கு மற்றும் தொடையில் வலி ஏற்படுவதோடு, குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயமும் உள்ளது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்