ஆட்டுப்பால் குழந்தைக்கு நல்லதா? ஆய்வில் வெளிவந்த புது தகவல்

Report Print Kavitha in குழந்தைகள்

ஆட்டுப்பால் குழந்தைக்கு நல்லது என்று ஆய்வொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆய்வினை ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.

இதில் ஆட்டுப்பாலை ஆய்வுக்கு உட்படுத்தி அதில் உள்ள சத்துக்களின் பயன்பாடு குறித்து பரிசோதனை செய்துள்ளார்கள்.

இந்நிலையில் ஆய்வின் போது ஆட்டுப்பாலில் 14 வகையான சத்துக்கள் இருப்பது மற்றும் இதில் 5 வகையான சத்துக்கள் தாய்ப்பாலிலும் இருப்பது கண்டறியப்பட்டது.

அதுமட்டுமின்றி ஆட்டுப்பாலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது என்றும், இரைப்பை குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உள்ளது என்றும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

தாய்ப்பாலில் இருக்கும் சத்துக்கள் ஆட்டுப்பாலில் இருப்பதால் அதை குழந்தைகளுக்கு கொடுக்க பரிசீலிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேராசிரியர் ஹர் சரண் கிங் “பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சோதனைகள் ஆட்டுப்பால் குழந்தைகளுக்கு அளிக்கும் பலன்கள் குறித்து உறுதி செய்ய எங்களுக்கு உதவியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் குழந்தைகளின் குடலில் ஏற்படும் தொற்றுகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகப்படுத்த ஆட்டுப்பால் உதவுகிறது எனவும் ஆய்வில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்