தண்ணீரில் மூழ்கிய குழந்தைகளுக்கு என்னென்ன முதலுதவி செய்யலாம்

Report Print Abisha in குழந்தைகள்

குழந்தைகள் தங்களின் அதிக அளவில்ஆர்வத்தினால் தண்ணீரில் இறங்கி விளையாடும் வழக்கம் கொண்டவர்களாகவே இருப்பர். இதனால் பல முறை குழந்தைகள் தண்ணீர் முழ்கி இறப்பு என்ற செய்தி பார்த்திருப்போம். அவ்வாறு தண்ணீரில் விழுந்த குழந்தையை காப்பாற்றி வழங்க வேண்டிய முதலுதவி என்ன என்று பார்ப்போம்.

  1. . தண்ணீரில் விழும் குழந்தைகளுக்கு மூச்சு விட சிரமம் எற்படும் இதனால் நுரையீரலில் தண்ணீர் சென்று மயக்கம் ஏற்படும், அப்படி ஏற்படாமல் தடுக்க அவர்களின் வாயில் பெரியவர் ஒருவர் வாயை வைத்து ஊதினால் மூச்சு காற்று கிடைத்து குழந்தை சரியாகிவிடும் பின்னார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம்.
  2. ஒருவேளை குழந்தைக்கு இதயம் செயல்படாமல் இருந்தால் நாடித் துடிப்பு இருக்காது. உடனடியாக குழந்தையின் நெஞ்சுப் பகுதியின் நடுவில் இரண்டுவிரல்களை வைத்து நன்றாக ஊன்றி அழுத்த வேண்டும். இப்படி அழுத்தும் போது சட்டென இதயம் துடிக்க ஆரம்பித்துவிடும். நுரையீரலில் தேங்கியிருக்கிற தண்ணீரும் வெளியேற ஆரம்பி்க்கும்.
  3. பெரியவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டால், குழந்தைகளுக்கு சொன்னது செய்ய கூடாது. மேலும், எக்காரணத்தைக் கொண்டும் தெரியாமல் கூட வயிற்றுப் பகுதியை அழுத்தக் கூடாது. தண்ணீரில் மூழ்கியவரைக் காப்பாற்றுகிற பொழுது, பாதிப்பக்கப்படவருடைய தலையை தண்ணீர் மட்டத்துக்கும் மேலே இருக்கும்படி தூக்கிப் பிடித்திருக்க வேண்டும்.சுவாசம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துவிட்டு உடனே செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்