குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா?

Report Print Jayapradha in குழந்தைகள்

மூளையில் உள்ள நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வைடைந்தால் ஞாபக மறதி ஏற்படும். அதனால் மூளை சரியாக எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும் இத்தகைய ஞாபக மறதி தற்போது குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது. இதனை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்
  • கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமான மீன்கள் உண்டால் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருப்பார்கள். இப்படி செய்தால் குழந்தைகளுக்கு மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.
  • எப்போதும் குழந்தைகளுக்கு படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதிலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும்.
  • குழந்தைகளை குறைந்தது 8 மணிநேரமாவது தூங்க வைக்க வேண்டும். மேலும் இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தைப் பின்பற்ற வைக்க வேண்டும்.
  • பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இதனை அடிக்கடி குழந்தைகளுக்கு தருவதின் மூலம் அவர்களின் மூளை செல்கள் நன்கு செயல்படும்.
  • தினமும் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்து வருவது மிகவும் நல்லது. ஏனெனில் மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமான கோலைன் சத்து முட்டையில் அதிகம் இருக்கிறது.
  • வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது.
  • பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
  • ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்