குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?

Report Print Jayapradha in குழந்தைகள்

வைரஸ் காய்ச்சல் வந்தால் கடுமையான உடல் வலி அரிப்புக்கள் மற்றும் தலைவலியை உணரக்கூடும்.

மேலும் வைரஸ் காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் கண்டிப்பாக அவர்களால் தாங்கி கொள்ள முடியாது.

எனவே மருத்துவ குணங்கள் அடங்கிய சில பொருட்களைப் பயன்படுத்தி எப்படி வைரஸ் காய்ச்சலை வரும் முன் தடுப்பது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

வைரஸ் காய்ச்சலை தடுக்க செய்ய வேண்டியவை
  • கொத்தமல்லி விதையில் மிக அதிக அளவில் ஆன்டி பயாடிக் நிறைந்திருப்பதால் தினமும் ஒரு கிளாஸ் கொத்தமல்லி டீ குடிப்பதன் மூலம் வைரஸ் தாக்காமல் பாதுகாக்க முடியும்.
  • இஞ்சியை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து கொண்டு அதை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு குடிக்கக் கொடுத்தால் குழந்தைகளின் வைரஸ் காய்ச்சல் குணமாவதோடு மார்புச்சளியையும் வெளியேற்றும்.
  • வெந்தயத்தை இரவு முழுக்க ஊறவைத்து இந்த தண்ணீரை வடித்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறிது சிறிதாகக் குடித்துவர, எப்பேர்ப்பட்ட வைரஸாக இருந்தாலும் ஓடோடிவிடும்.
  • நன்கு கொதித்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகத்தைப் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி, ஆறியபின் குடித்து வரலாம்.
  • துளசியை டீயாகவோ அல்லது வெறுமனே அப்படியே, வெறும் இலைகளையோ மென்று தினமும் சாப்பிட்டு வர வைரஸ் காய்ச்சல் அண்டவே அண்டாது.
  • சாதம் வேகவைத்த அரிசிக்கஞ்சி தான் நம்முடைய முன்னோர்களால் காய்ச்சலில் இருந்து விடுபடுவதற்காக உட்கொள்ளப்படுகிறது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்