குழந்தைகளுக்கு எந்த நோயும் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Report Print Jayapradha in குழந்தைகள்

குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்காது. எனவே இதனால் எளிதில் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

எனவே குழந்தைகளுக்கு எந்த நோயும் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க செய்ய வேண்டிவை
  • குழந்தைகளை தினமும் குளிக்க வைக்கும்போது வசம்பு மற்றும் மஞ்சள் இரண்டையும் ஒன்றாக அரைத்து குழந்தையின் உடல் முழுவதும் தடவி வெந்நீரால் குளிக்க வைக்கவும். இவ்வாறு செய்வதினால் குழந்தைகளுக்கு எந்த ஒரு நோயும் வராமல் பாதுகாக்க முடியும்.
  • குழந்தையை குளிக்கவைத்த பிறகு குழந்தையின் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெயை தடவி விடவும். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் சளி இருந்தும் மற்றும் அனைத்துநோய்களில் இருந்தும் பாதுகாக்க முடியும்.
  • குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படும்போது வசம்பை எரித்து அவற்றை தாய்ப்பாலில் கலந்து குழந்தைக்கு ஒரு சங்களவு கொடுத்து வந்தால் குழந்தையின் வயிற்று வலி சரியாகும்.
  • குழந்தைக்கு வாரத்தில் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் உடல் உஷ்ணத்தை தணிக்க இயலும்.
  • அதே போல் குலந்தியை முறை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடும் போது உரமருந்தை அவசியமாக கொடுக்க வேண்டும் இவ்வாறு செய்வதினால் குழந்தைக்கு ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல், வயிற்று வலி என்று அனைத்து சரியாகும்.
  • குழந்தைகளை சூரிய வெளிச்சத்தில் சிறிது நேரம் காண்பிக்க விட்டமின் டி3 சத்து கிடைக்கும். பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க முடியும். மேலும் இது குழந்தைகளின் பல் வளர்ச்சிக்கும் எலும்பு வளர்ச்சிக்கும் உதவும்.
  • குழந்தைகளுக்கு கேரட், புரோக்கோலி, உருளை, பீட்ரூட், பீன்ஸ், அவரை, பூசணி, பரங்கிக்காய், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற பல்வேறு காய்கறிகளைத் தினம் ஒரு வேளை உணவாகக் கொடுத்து வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers