குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் முக்கிய உணவுகள்

Report Print Jayapradha in குழந்தைகள்

வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமெனில் சிறுவயதிலிருந்தே நாம் மேற்கொள்ளும் உணவுகளில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.

வரைமுறையே இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு உணவுகளை கொடுத்து வந்தால் இதன் தாக்கம் அவர்கள் வளர ஆரம்பிக்கும்போது தெரியவரும்.

அந்தவகையில் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தெரிந்து கொண்டு இனி அந்த உணவுகளை அதிகமாக கொடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

பால்

பால் மற்றும் சோயா பால் போன்றவற்றை குழந்தையின் செரிமான மண்டலத்தால் எளிதில் செரிக்க முடியாது. எனவே குழந்தையின் முதல் வருடம் வரை தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது.

சிட்ரஸ் பழங்கள்

ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி, மற்றும் ப்ளாக்பெர்ரி ஆகியவற்றை குழந்தைகளின் உடலால் எளிதாக செரிக்க முடியாது. மேலும் குழந்தைகளுக்கு பழங்களைக் கொடுக்கும் போது மசித்தோ, பழச்சாறுகளாகவோ கொடுக்க வேண்டும்.

தேன்

தேனில் அதிக அளவில் பாக்டீரியா நிறைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம், இவை குழந்தைகளின் உடலில் நச்சுத்தன்மையை தோற்றுவிக்கும். எனவே இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்க வேண்டும்.

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெய் குழந்தைகளுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தும், முடிந்தவரை இதை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும்.

காய்கறிகள்

கீரைகள், கிழங்குகள் மற்றும் வேர்க்காய்கறிகள் போன்றவற்றில் நைட்ரேட் அளவு அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு செரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே முடிந்தவரை அதிக வைட்டமின்கள் மற்றும் குறைவான நைட்ரேட் நிறைந்த காய்களை கொடுங்கள்.

உப்பு

குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பு போதுமானது. தாய்ப்பால் மற்றும் ஃபார்முலா பாலிலிருந்து குழந்தைக்கு தேவையான அளவு உப்பு கிடைக்கிறது. முடிந்த வரை உப்பை பயன்படுத்தாமல் தவிர்ப்பது சிறந்தது.

நட்ஸ்

குழந்தைகளுக்கு நட்ஸ்ஸை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவை குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் கடுமையான மூச்சு திணறலை ஏற்படுத்தி, அதனால் இறப்பையும் ஏற்படுத்தலாம்.

சாக்லேட்

சாக்லேட் பால் பொருட்களால் செய்யப்பட்டிருப்பதால் இவை குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சாக்லேடின் பெரிய துண்டுகள் குழந்தைகளுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தும்.

பாப்கார்ன்

பாப்கார்ன் குழந்தைகளுக்கு கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். எனவே 12 மாதங்களுக்கு குறைவான குழந்தைகளுக்கு பாப்கார்ன் கொடுக்க கூடாது.

முட்டை

முட்டையின் வெள்ளைக்கரு குழந்தைகளுக்கு அதிக அலர்ஜி மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க துவங்கும் போது, முட்டையின் மஞ்சள் கருவை தனியே பிரித்து நன்கு வேக வைத்து கொடுக்கவும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்