குழந்தைகளின் விழுந்த பற்களுக்கு இனி மவுசோ மவுசுதான்: ஆய்வில் வெளிவந்த மகிழ்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in குழந்தைகள்

ஒரு குழந்தையின் பற்களிலிருந்து பெறப்படும் குருத்தணுக்களைக் கொண்டு பல்லில் ஏற்படும் காயங்களை சரிசெய்வதுடன், இறந்த பற்களையும் பிரதியீடு செய்யமுடியுமென ஆய்வுகள் தெருவிக்கின்றன.

குறித்த ஆய்வில் விஞ்ஞானிகளால் குருத்தணுக்களைப் பயன்படுத்தி 30 குழந்தை நோயாளிகளில் அவர்களின் மென்மையான பல்லின் உள் இழையங்களைப் புதுப்பிக்க முடிந்திருக்கிறது.

இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இளையோரிலும் இழந்த பற்களை மீட்டெடுக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெருவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் பல் மருத்துவர்கள் Apexification சிகிச்சை மூலமாக பல் வேர்களின் வளர்ச்சியைத் தூண்டியிருந்தனர்.

ஆனாலும் இது ஒரு தக்க தீர்வன்று, இதன் மூலம் இழந்த கலங்களில் எந்த பிரதியீடும் நடைபெறுவதில்லை.

தற்போதைய முறை எதிர்காலங்களில் வினைத்திறனான சிகிச்சை முறைக்கு வழிவகுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

இது தொடர்பான விபரங்கள் அண்மையில் Science Translational Medicine எனும் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்