சிறு வயதில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சரும நோய்கள்!

Report Print Jayapradha in குழந்தைகள்

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சருமப் பிரச்சனைகள் குறித்தும், அவை வந்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு பார்க்கலாம்.

வேர்க்குரு

சூடான வானிலை அல்லது சூடான ஆடைகள் போன்ற பல்வேறு காரணங்களாலும் குழந்தையின் உடல், முகம், கழுத்து, பின்புறம், அல்லது அடிவயிற்றில் அதிகமாக சிறிய சிவப்பு புடைப்புகள் வடிவத்தில் வேர்க்குரு காணப்படும்.

இதனை சரிசெய்ய உங்கள் குழந்தையை வெப்பத்திலிருந்து வெளியேற்றுவது அல்லது உங்கள் குழந்தையின் உடலுக்கு ஒட்டாத சில தளர்வான ஆடைகளை அணிவிக்க வேண்டும். இது வெடிப்புகளை குறைக்க உதவுகிறது.

முகப்பரு

பொதுவாக சிறிய பருக்கள் அல்லது வெள்ளை நிறத்தில், உங்கள் குழந்தையின் முகம், கழுத்து மற்றும் கன்னத்தில் ஏற்படும்.

இவற்றை அவற்றின் ஆரம்ப காலத்திலேயே குணப்படுத்தப்பட முடிந்தளவு இரசாயனம் கலக்காத குணப்படுத்த கூடிய எதிர்ப்பு பொருட்களை பயன்படுத்துங்கள்.

அம்மை

தடுப்பூசி போட்டாலும் உங்கள் குழந்தைக்கு அம்மைநோய் வர வாய்ப்புகள் உள்ளது. அம்மை நோய் பொதுவாக சிவப்பு கொப்புளங்கள் அல்லது தடிப்புகள் வடிவில் வெளிப்படுகிறது.

இது காய்ச்சல், பசியின்மை, குமட்டல், மற்றும் தசை வலிகள் ஆகியவற்றால் கூட ஏற்படலாம். இது ஒரு தொற்றுநோயாகும்.

எக்ஸிமா

எக்ஸிமா என்பது தோலின் சில பகுதிகளில் மட்டும் அரிப்பு, கொப்புளங்கள், இரத்த கசிவு போன்றவை ஏற்படும் நிலையாகும்.

இது கைகள், முகம், கழுத்து, முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் ஏற்படலாம். இதை குணப்படுத்துவதற்கு ஈரத்துணியை வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் மென்மையாக தேய்த்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

குளிர் புண்கள்

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு குளிர் புண்கள் மிகவும் பொதுவானவை. இவை வாய்வழி பகுதியில் கொப்புளங்கள் வடிவில் உருவாகின்றன,

இந்த புண்கள் 5-10 நாட்கள் வரை நீடிக்கும். பின்னர் அவை மறைய தொடங்கும். இதனால் பசியின்மை, தாகமின்மை ஏற்படலாம், ஆனால் உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கை, கால் மற்றும் வாய் நோய்

இந்த நோய் கொப்புளங்கள், தொண்டை புண், மற்றும் லேசான காய்ச்சல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. மேலும் இவை குழந்தைகளின் கீழ்புறத்தை நோக்கி பரவுகின்றன.

இந்த புண் வந்தால் சாப்பிடுவதும், குடிப்பதும் மிகவும் சிரமமாகிவிடும். குழந்தைகள் மருத்துவரை விரைவில் அணுகி சரியான மருந்துகளை உபயோகியுங்கள், குழந்தையின் உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

விழி வெண்படல அழற்சி

பாக்டீரியா, ஒவ்வாமை, அல்லது வைரஸ் தொற்று காரணமாக குழந்தைகளின் கண்ணீரில் இளஞ்சிவப்பு நிற ஒட்டும் தன்மை கொண்ட நீர் வெளியேறும். மேலும் இதனால் கண்கள் சிவப்பாகவும் விழித்திரை மஞ்சள் நிறத்திலும் மாறும்.

இந்த தொற்றுநோயிலிருந்து குழந்தையை பாதுகாக்க விரைவில் குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers