குழந்தைகளில் மன இறுக்கத்திற்கு காரணமாகும் பீடைநாசினி

Report Print Givitharan Givitharan in குழந்தைகள்

கர்ப்ப காலத்தில் DDT (dichlorodiphenyltrichloroethane) இற்கு வெளிக்காட்டப்படுவது குழந்தைகளில் மனவிறுக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சொல்லப்படுகிறது.

DDT இன் முகவர் 1960களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார், தற்போது அதன் பாவனை பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுவருகிறது.

ஆனாலும் ஒரு சில நாடுகள் இதனைப் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

மனவிறுக்கம் தொடர்பான ஆய்வுக்கென கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தாய்மார்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தியிருந்தனர்.

இதன்போது 1987 - 2005 காலப்பகுதிகளில் மேற்படி நோய்நிலைமைக்கு உள்ளாகியிருந்த குழந்தைகளின் தாய்மார்களின் கர்ப்ப காலத்தில் சேகரிக்கப்பட்டிருந்த குருதி மாதிரி பரிசீலிக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாட்டு பரிசோதனைக்காக மற்றுமொரு 778 வகைகள் எடுக்கப்பட்டிருந்தன.

இதன்போதே இத் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. DDT ஆனது 1940 களில் நுளம்புகளை பாரியளவில் இல்லாதொழிப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இது மிக வினைத்திறன் வாய்ந்ததாகக் காணப்பட்டது. தாவர பராமரிப்பில் பீடைகளை அகற்றவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதன் சூழல் தாக்கம் பற்றி Rachel Carson என்பவர் Silent Spring எனும் தனது புத்தகத்தில் முதலில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்