குழந்தைகளுக்கு பூண்டு அளிப்பது நல்லதா? கெட்டதா?

Report Print Jayapradha in குழந்தைகள்

பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் ஜீரணதன்மை, இரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, முகப்பரு மற்றும் மூலநோய்கள் வரமால் தடுக்கும்

இத்தகைய மகத்துவம் நிறைந்த பூண்டினை குழந்தைகளுக்கு அளிப்பது நல்லது தானா அல்லது குழந்தையின் நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா என்ற தகவல்களை பற்றி பார்ப்போம்.

பூண்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா?
 • சரியான பூண்டு வகையை தேர்ந்தெடுத்து மிகக் குறைவான அளவில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தாலே குழந்தைகளுக்கு பூண்டு பாதுகாப்பானதாக அமையும்.
 • குழந்தைகளில் பிறந்த 10வது மாதம் முதல் 12 ஆம் மாதம் வரை சிறிது சிறிதாக பூண்டினை உணவில் சேர்த்து அளிப்பது மிகவும் நல்லது.
 • குறிப்பாக குழந்தை பிறந்த 6 மாத காலம் வரை கண்டிப்பாக அவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும்.
எப்படிப்பட்ட பூண்டு அளிக்க வேண்டும்?
 • குழந்தைகளுக்கு தரும் பூண்டானது வெண்மை நிறம் கொண்டதாக, நன்கு சாறு வளம் நிறைத்ததாகவும் தெளிவானதாகவும் இருக்க வேண்டும்.
 • குழந்தைகளுக்கு பூண்டின் சுவை சேர்த்த உணவு பிடிக்காமல் இருந்தால், கொஞ்சம் சர்க்கரையை உணவில் சேர்த்து அளிக்கலாம்.

 • குழந்தைகளுக்கு பச்சையான பூண்டுகளை அளிக்கக் கூடாது; மீறி அளித்தால், குழந்தைகளின் உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே நன்கு சமைத்த பூண்டுகளை குழந்தைகளுக்கு அளிப்பது மிகவும் நல்லது.
 • குழந்தைகளுக்கு பூண்டு சேர்த்த உணவு ஒத்துக்கொள்ளவில்லை எனில் ஒவ்வாமை அதாவது அலர்ஜி ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு பூண்டு தரும் பயன்கள்!
 • குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குழந்தைகளுக்கு பூண்டு கலந்த உணவினை அளிப்பபது நல்லது.
 • குழந்தைகள் பூண்டு கலந்த உணவை தொடர்ந்து உண்டு வருவதன் மூலம் குழந்தைகளில் இருதய பாதிப்புகள், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

 • குழந்தைகளின் வயிற்றில் ஏற்படும் புழுத்தொல்லை மற்றும் குடற்புழுக்கள் போன்றவை முற்றிலுமாக அகற்றப்படுவதற்கு பூண்டு சேர்த்த உணவு பெரிதும் உதவும்.
 • குழந்தைகளின் உடல் செயல்பாடு மேம்படவும், குழந்தைகளை நுண் உயிர் தாக்குதல் மைக்ரோ பையல் நோய் தொற்றுகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பூண்டு பெரிதும் உதவுகிறது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்