குழந்தைகளுக்கு ஜூஸ் அளிப்பதை நிறத்துவது நல்லது - குழந்தை மருத்துவர்கள்

Report Print Givitharan Givitharan in குழந்தைகள்

குழந்தைகள் எவ்வளவு ஜூஸ் எடுத்துக்கொள்ள முடியும்? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும்.

குழந்தை மருத்துவர்கள் கூறுவது, பாடசாலைப் பிள்ளைகள் (வயது 7 - 17 வருடங்கள்) 8 அவுன்ஸ் வரையிலும், முன்பள்ளி பிள்ளைகள் (வயது 4 - 6) 4 - 6 அவுன்ஸ் வரையிலும், 1 - 3 வயதுள்ள குழந்தைகள் 4 அவுன்ஸ் வரையிலும், கைக் குழந்தைகள் துளியளவேனும் எடுத்துக்கொள்ளலாகாது எனவும் கூறுகின்றனர்.

பழப் பானங்கள் சில விற்றமின்கள் அகற்றப்பட்டு நார்த் தன்மை கூடிய பதார்த்தம். இது பற்களைப் பாதிக்கின்றது.

சில பானங்கள் 100 வீதம் பழங்கள் கொண்டு உருவாக்கப்படுகின்றன. அவை சீனி போன்ற எந்தவொரு சேர்க்கைகளையும் கொண்டிருப்பதில்லை.

ஆனாலும் சீனிச் சேர்க்கை இல்லை என சொல்ல முடியாது. சோடாவிலும் இது போன்ற சீனி கொள்ளளவு அதிகம். இதனால் ஒப்பீட்டளவில் சோடாவை விட பழப் பானங்கள் ஆரோக்கியமானவை, இருப்பினும் அவையும் தீங்கு விளைவிக்கக் கூடியன.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்