குழந்தைகளுக்கு டீ மற்றும் காபி கொடுக்கும் பெற்றோர்களே இதனை கவனியுங்கள்

Report Print Kabilan in குழந்தைகள்

குழந்தைகளுக்கு எந்த வயதில் தேநீர், காபி கொடுக்க வேண்டும் என உங்களுக்கு தெரியுமா?

தேநீரில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம், இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்துவதால், குழந்தைகளுக்கு அடிக்கடி தேநீர் தருவதை தவிர்க்க வேண்டும்.

தேநீர், காபி போன்ற பானங்களை குழந்தைகளுக்கு 4 வயது வரை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில், தேநீரில் குடல் புண்ணை ஏற்படுத்தும் அமிலங்கள் இருக்கின்றன, மேலும் இது பசியையும் குறைக்கும்.

கேபின் என்பது புகையிலையில் உள்ள நிகோடின் போன்ற அடிமைப்படுத்தும் பொருள் ஆகும். இது தேநீரில் 2 சதவித அளவில் உள்ளதால், தேநீரை அடிக்கடி குடிக்கும் பழக்கத்தை இது ஏற்படுத்தும்.

கேபின், முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டிவிட்டு, பின் அதனை அடக்குகிறது. எனவே, இந்த பழக்கத்தை உடனடியாக விட்டால் தலைவலி, சோர்வு, நடுக்கம் முதலியன ஏற்படலாம்.

தேநீரை அடிக்கடி குடிப்பதனால், உடலில் இருந்து அதிக அளவில் சிறுநீர் வெளியேறும். உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும், இது வலிந்து நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் உடலின் நீர் இழப்பு உண்டாகும்.

சாதாரண குழந்தைகளை விட, தேநீர் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

தேநீரில் உள்ள அல்கலாய்டு பொருட்கள், நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச் சத்தை குடலால் உறிஞ்சவிடாமல் தடுப்பதனால், இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும்.

இதன் மூலம் ரத்தசோகை உண்டாகும் வாய்ப்பு உள்ளது. இதே போல காபியில், தேநீரில் உள்ளதைப் போல இருமடங்கு கேபின் உள்ளது. இதனால், தேநீர் குடிப்பதால் உண்டாகும் விளைவுகளைப் போல, காபி இருமடங்கு விளைவுகளை ஏற்படுத்தும்.

கேபினுடன், டானின் என்னும் பொருளும் காபியில் உள்ளது. இது தேநீரை விட அதிக ஆபத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும்.

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஒருமுறை மட்டும் குறைவான அளவில் தேநீரோ அல்லது காபியோ கொடுக்கலாம். ஆனால், விடுமுறை நாட்களில் இதனை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்