குழந்தைகளின் வயிற்றுப்போக்கை தடுக்க என்ன செய்யலாம்?

Report Print Printha in குழந்தைகள்

குழந்தைகளை தாக்கும் சிறு உடல்நலக் கோளாறு பிரச்சனைகளுக்கு வீட்டில் உள்ள இயற்கை பொருட்கள் மூலமே எளிதில் தீர்வு காண முடியும்.

வயிற்றுப்போக்கு

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை இருந்தால் உடனே வசம்பை உரசி அதை காலை மற்றும் மாலை என்று இருவேளை கொடுத்து வர குணமாக்கலாம்.

சளி

குழந்தைகளுக்கு சளி தொல்லைகள் இருந்தால் துளசி இலைச் சாற்றில் 3-4 துளிகள் எடுத்து அதை தாய்ப்பாலில் கலந்து கொடுக்க வேண்டும்.

கக்குவான்

கக்குவான் இருமல் குழந்தைகளுக்கு வந்தால், உடனே பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுக்கலாம்.

சாதாரண காய்ச்சல்

குழந்தைகளுக்கு சாதாரணமாக காய்ச்சல் ஏற்பட்டால், தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுக்க காய்ச்சல் குணமாகும்.

உடம்பு வலி

சில குழந்தைகள் உடம்பு வலியால் அழுதுக் கொண்டே இருக்கும். அதற்கு சிறிய வெங்காயத்தைத் தட்டி அதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்து விட குழந்தைகளின் உடம்பு வலி குறையும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்