குழந்தைகள் இடது கை பழக்கம் உடையவர்களா? பிறக்கும் முன்பே எதிர்வுகூற முடியும்

Report Print Givitharan Givitharan in குழந்தைகள்

வலது கை பழக்கமுடையவர்களை விடவும் இடது கை பழக்கம் உடையவர்கள் பொதுவாக விசேட திறமைகளைக் கொண்டிருப்பார்கள்.

குழந்தைகள் எந்த கை பழக்கம் உடையவர்கள் என்பதை கண்டறிய பிறந்து சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் ஆகும்.

ஆனால் ஒரு குழந்தை பிறக்கும் முன்னரே எந்த கை பழக்கமுடையது என கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயின் வயிற்றில் இருக்கும்போது குழந்தைகள் திரும்பும் பக்கத்தினைக் கொண்ட இதனை கண்டறிய முடியும் என குறிப்பிடுகின்றனர்.

இதற்காக ஸ்கானிங் அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுமார் 29 கர்ப்பிணிப் பெண்களை வைத்து இந்த ஆய்வினை இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வின் போது 14, 18 மற்றும் 22வது வாரங்களில் சுமார் 20 நிமிடங்கள் வரையில் குழந்தையின் அசைவுகள் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்