உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய 7 சிறுவர்கள்

Report Print Gokulan Gokulan in குழந்தைகள்

பொதுவாக மனித இனத்தின் இயல்பு என்பது, சிறு குறை இருந்தாலே மனதளவில் பெரிதும் பாதித்துவிடுவதுதான்.

அப்படிப்பட்ட மனித இனத்திற்கு மத்தியில் குறைபாடுகளுடன் பிறந்த இச்சிறுவர்கள், நேர்மறையாக எண்ணத்துடன் வாழ்ந்து வருவது நிச்சயம் அனைவரையும் ஆச்சயரிப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அப்படி என்ன பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது? வருங்கள் பார்ப்போம்,

Gabby Williams

4 வயதாகும் இந்த குழந்தைக்கு ஏற்பட்ட மிகவும் அரிதான நோயின் விளைவாக ஒரு வயது குழந்தை போலவே தோற்றமளித்து வருகிறது. கண் பார்வையற்று, வாய் பேச முடியாமல் உள்ள இந்த குழந்தையின் நிலை வார்த்தைகளால் விவரிக்க முடியாத வண்ணம் உள்ளது.

Giuliano and Claudio Stroe

11 மற்றும் 9 வயதாகும் இவர்கள் உலகின் வலுவான சிறுவர்கள் என அறியப்படுகின்றனர். இரண்டு வயதிலிருந்து உடற்பயிற்சி செய்து வரும் இவர்கள், இருபது முறை 90-டிகிரி புஷ்-அப்ஸ் எடுப்பது, கொடியை போல ஒரு துருவத்திற்கு 1 நிமிடம் 30 வினாடிகள் நேராக வைத்திருப்பது என்பன போன்ற சாதனைகளை படைத்துள்ளனர்.

Edam

தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த மிகவும் கருப்பு நிற தோல் கொண்ட இந்த குழந்தையின் புகைப்படங்கள் 2013-ஆம் ஆண்டே சமூகவலைதளங்களில் பரவியிருந்தது. குறிப்பாக இந்த குழந்தையின் கண் உட்பட அனைத்து இடங்களும் கருப்பு நிறத்துடன் இருப்பது பார்ப்பதற்கே வருத்தமளிக்கும் விதத்தில் உள்ளது.

Richard Sandrak

சின்ன ஹெர்குளிஸ் என அறியப்படும் இந்த சிறுவன் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர். தற்காப்புக்கலையில் சாம்பியனான இவர் பாடிபில்டராகவும் உள்ளார். 95 கிலோ பென்ச் பிரஸ் செய்து அசத்தும் இந்த 8 வயது சிறுவன், 600 புஷ்-அப்ஸ் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

Lola Chuil

கருப்பு ஹானா மோண்டானாவாக அறியப்படும் இவரை இன்ஸ்டாகிரமில் மட்டும் 40 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். 16 வயதாகும் இந்த அழகிய பெண்ணின் உமிழ்ந்த மூக்கும், நீல-சாம்பல் நிற கண்களும் இவரை வேற்று கிரக வாசி போலவே காட்சியளிக்க வைக்கிறது.

Lu Hao

60 கிலோ எடையுடன் பிரம்மாண்டமாக தோற்றமளிக்கும் இச்சிறுவனின் வயது 4. இவர் வயது குழந்தைகளின் சராசரி எடையைவிட 5 மடங்கு கூடுதலாக எடை உள்ள இக்குழந்தை, தினமும் 3 கிண்ணம் சாதமாவது சாப்பிட்டு வருகிறது. இதை குறைக்க பெற்றோர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தை அழுதுவிடுவதால் தடுக்க முடியவில்லை. இதற்கான் காரணம் குறித்து மருத்துவர்களே குழப்பமடைந்துள்ளனர்.

Kristina Pimenova

ரஷ்யாவைச் சேர்ந்த 9 வயது சிறுமியான கிரிஸ்டினா, உலகின் சிறந்த அழகியாக அறியப்படுகிறார். சூப்பர் மாடலாக வலம் வரும் இச்சிறுமியுடன் Armani, Benetton போன்ற பெரிய மாடலிங் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்