இந்த உணவுகளை மட்டும் குழந்தைக்கு கொடுக்காதீர்கள்

Report Print Printha in குழந்தைகள்

குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும், ஆனால் அதன் பின் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

எனவே ஆரோக்கியமான ஒருசில உணவுகளை கூட குழந்தைகளுக்கு ஒரு வயது ஆகும் வரை கொடுக்கக் கூடாது.

பால்

குழந்தைகளுக்கு மாட்டு பால் மற்றும் சோயா பால் கொடுப்பதால், செரிமானம், சிறுநீரக செயல்பாட்டை பாதித்து, வயிற்றுப்போக்கு மற்றும் அலர்ஜி ஆகிய பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சிட்ரஸ் பழங்கள்

திராட்சை, ஆரஞ்ச், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, பிளாக் பெர்ரி ஆகிய சிட்ரஸ் பழங்களில் அமிலத் தன்மை அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் அடையாமல், தடிப்பு அல்லது வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

தேன்

தேன் குழந்தைகளுக்கு மலச்சிக்கலை உண்டாக்குகிறது. அதேபோல மற்ற திரவ இனிப்புகளும் கூட குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. எனவே திரவ இனிப்புகள், மாப்பிள் சிரப் போன்றவற்றை கொடுக்கக் கூடாது.

காய்கறிகள்

கீரைகள் மற்றும் பீட்ரூட்டில் லேக்டோஸ் அளவுக்கு அதிகமாக உள்ளது. அதனால் இவற்றை குழந்தைகளுக்கு ஒரு வயது ஆவதற்குள் கொடுக்கக் கூடாது.

உப்பு

ஒரு நாளைக்கு குழந்தைகளுக்கு ஒரு கிராம் உப்பு மட்டுமே போதுமானது. ஏனெனில் தாய்ப்பாலிலே குழந்தைக்கு தேவையான உப்பு இருப்பதால் உப்பு அதிகம் கலந்த எந்த ஒரு பொருளையும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.

நட்ஸ்

பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளையும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. ஏனெனில் இவை அலர்ஜியை உண்டாக்கிவிடும்.

சாக்லேட்

சாக்லேட்டில் உள்ள காஃபின் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். எனவே சாக்லேட்டுகளை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.

பாப் கார்ன்

நொறுக்கு தீனியான பாப் கார்ன் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. அதனால் இதை 12 மாதத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது.

முட்டை

முட்டையின் வெள்ளைக் கருவானது குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியது. அதனால் குழந்தைக்கு முழுமையாக முட்டையின் வெள்ளைக் கருவை நீங்கி விட்டு, மஞ்சள் கருவை மட்டும் சமைத்து கொடுக்கலாம்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்